2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகர சபையின் 2019ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகர சபை பிரிவில் மரம் நாட்டும் நிகழ்வு, மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி மன்னார் பொது மயானத்தில், இன்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில், 250 மரக்கன்றுகள் நாட்டி வைக்கும் வகையில், இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்டன் டேவிட்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் நகர சபையின் செயலாளர், நகர சபை உபதவிசாளர், நகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

தொடர்ந்து, மன்னார் நகர சபைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .