Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் - முசலி பிரதேச சபையின் தவிசாளர், புத்தளம் 4ஆம் மைல்கல் பகுதியிலுள்ள அவரது வீட்டில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி சந்ர பெர்ணான்டோ தெரிவித்தார்.
அவரது குடும்பத்தாரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தர்.
அப்துல் கபூர் மொஹொமட் சுபியானும் அவரது குடும்பமுமே, இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முசலி பிரதேச சபைக்கு உரித்தான கெப் ரக வாகனத்தில், அவர் தமது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்னர் திரும்பியதாகவும் இது தொடர்பில், புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலம், புத்தளம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, வைத்தியர், பொலிஸ் குழுவினர் அவரது வீட்டுக்குச் சென்று, தவிசாளரையும் அவரது குடும்பத்தாரையும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியதாகவும் தெரியவருகிறது.
தவிசாளர் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவருகிறது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025