2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

‘முல்லைத்தீவில் ஒன்றுகூடுவோம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், க. அகரன்

தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் மகாவலித் திட்டத்தை எதிர்க்க, முல்லைத்தீவில் ஒன்றுகூடுவோமென, வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினரும் வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில், அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், 1980களிலிருந்தே, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரிக்கும் வகையிலான திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நடைபெற்றுவந்துள்ளனவெனவும், எனினும், ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கம், தனது வேலையை மீண்டும் ஆரம்பித்துள்ளதெனவும் தெரிவித்துள்ள அவர், மகாவலி "எல்" வலயத் திட்டத்தினூடாக, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மாத்திரமல்லாது, வடக்கின் வன்னி, யாழ்ப்பாண மாவட்டங்களை நிலத்தொடர்பின்றிப் பிரிப்பதற்கான முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவெனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கும் முகமாக, முல்லைத்தீவில் நாளை மறுதினம் (28) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு, அனைவரும் ஆதரவு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்வதாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .