Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, கற்றாளை பயிர்ச்செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன், இதன் முதற்கட்டமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், போரால் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பில் பெண்கள் தொழில் முயற்சியாளர் சங்கத்தின் உறுப்பினர்களான 100 பெண் விவசாயிகளுக்கு, தலா கால் ஏக்கர் என்ற அடிப்படையில், நடுகை பொருள்களும் அதற்கான ஏனைய உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டு, கற்றாளைச் செய்கை விஸ்தரிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேச செயலகப் பகுதிகளிலும், எதிர்வரும் காலங்களில் கற்றாளைச் செய்கையை விஸ்தரிக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும், உகநாதன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago