Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை அமைப்பதற்கான காணிகள் எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லையென, மாவட்டக் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கௌரி திலகன் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளனவெனவும் இதற்கான மேச்சல் தரவைகள் என்பது பாரிய பிரச்சினையாகவுள்ளதெனவும் தெரிவித்தார்.
மேச்சல் தரவைகளை அமைப்பதற்கான காணிகளை அடையாளப்படுத்தி, அக்காணிகளில் மேய்ச்சல் தரவைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், அடையாளப்படுத்தப்படுகின்ற காணிகள் வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், அவ்வாறு அடையாளப்படுத்தும் காணிகளை விடுவிப்பதில் இழுபறிநிலை காணப்படுவதாகவும் கூறினார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago
22 Nov 2025