2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

Editorial   / 2018 மே 06 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேசத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள, ஆயிரத்து என்பத்தெட்டு குடும்பங்களுக்கு, உலர் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து இருநூற்று எழுபத்தெட்டு குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கரைச்சிப் பிரதேச செயலர்  ரி.முகுந்தன் தெரிவித்தார். கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்தில், வறட்சி நிலைமைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், அக்கராயன் குளம் பிரதேசத்தில் 465 குடும்பங்களுக்கும், பொன்னகர் பகுதியில் 142 குடும்பங்களுக்கும், பாரதிபுரம் பகதியில் 130 குடும்பங்களுக்கும், மலையாளபுரம் பகுதியில் 45 குடும்பங்களுக்கும், விவேகானந்தநகர் பகுதியில் 10 குடும்பங்களுக்கும், கிருஸ்ணபுரம் பகுதியில் 234 குடும்பங்களுக்கும், உதயநகர் கிழக்குப் பகுதியில் 05 குடும்பங்களுக்கும், அம்பாள்நகர் பகுதியில் 220 குடும்பங்களுக்கும் மற்றும் கணேசபுரம் பகுதியில் 27 குடும்பங்களுக்குமே, குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .