2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

வவுனியா விபத்தில் பெண் பலி

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா முருகனூர் பகுதியில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

வவுனியா - முருகனூரை சேர்ந்த தர்சினி (வயது 25) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது கணவரும், முருகனூர் பகுதியில் அமைந்துள்ள தமது வீட்டிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி ஓடடோவில்  சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஓடடோ அருகில் இருந்த மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த கணவன் மற்றும் மனைவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னரே திருமணம் நடைபெற்றதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .