2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

வவுனியாவில் பல பகுதிகள் விடுவிப்பு

Niroshini   / 2021 ஜனவரி 18 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

வவுனியாவில், தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பல பகுதிகள், இன்று (18) திறக்க்பபட்டன.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில், பட்டாணிசூர் கிராமம், வவுனியா பிரதான நகரம் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அவற்றில் பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி, கந்தசாமி கோவில் வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதி என்பவற்றைத் தவிர்ந்து ஏனைய பகுதிகள் நேற்று காலை விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் தினச் சந்தை ஆகியன திறக்கப்படாதுள்ளது. ஆனால், குறித்த வீதியால் பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .