2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

மாந்தை கிழக்கில் 351 வீடுகள் நிர்மாணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 5 கிராம அலுவலகர் பிரிவுகளில் இந்திய வீட்டுத்திட்டத்தின் 3ஆம் கட்டமாக 351 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ரீ.பிருந்தாபன் தெரிவித்துள்ளார்.

மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் 2,300 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள நிலையில், நட்டாங்கண்டல் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள 54 குடும்பங்கள் தங்களுக்கு இதுவரையில் எந்தவிதமான வீட்டுத்திட்டங்களும் வழங்கப்படவில்லையெனத் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம்  தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிலையில், அம்பாள்புரத்தில் 74 வீடுகளும் செல்வபுரத்தில் 148 வீடுகளும் சிவபுரத்தில் 35 வீடுகளும் வன்னிவிளாங்குளத்தில் 45 வீடுகளும் விநாயகபுரத்தில் 49 வீடுகளுமாக மொத்தம் 351 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்திய வீட்டுத்திட்டம் முன்னுரிமைப் புள்ளிகள் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதுடன், புள்ளிகள் தெரிவில் நட்டாங்கண்டல் கிராம அலுவலகர் பிரிவு உள்வாங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X