2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வவுனியா தெற்கு தமிழ் பிரிவு பிரதேசசபைத் தேர்தலில் 78 வேட்பாளர்கள் களத்தில்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

பத்து உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வவுனியா தெற்கு தமிழ் பிரிவு பிரதேசசபைத் தேர்தலுக்கு ஐந்து அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவுமாக 78 வேட்பாளர்கள்  களத்தில் இறங்கியுள்ளனர்.  

இந்த பிரதேசசபை பிரிவில் 48,477 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளதாக வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. 188 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட இந்த பிரிவில் 86 கிராமங்கள் உள்ளது.

இதேவேளை, 10,955 வாக்காளர்களைக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு 13 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 68 வேட்பாளர்களும் வெங்க செட்டிகுளத்திற்கு 72 வேட்பாளர்களும்; போட்டியிடுகின்றனர். தெரிவு செய்யவேண்டிய உறுப்பினர்களுடைய தொகை 9 வாக்காளர் தொகை 18,925;.

தெற்கு சிங்கள பிரிவிற்கு 48 வேட்பாளர்கள் பிரதேசசபைத் தேர்தலுக்கு போட்டியிடுகின்றனர். இந்த பிரிவில் 9,633 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். சபைக்கு 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--