Super User / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
	(சரண்யா) 
	  
	வன்னிப்பகுதியில் குறிப்பாகக் கிளிநொச்சியில் கட்டாக்காலியாகத் திரியும் கால்நடைகளை சட்டவிரோதமான முறையில் சிலர் வேட்டையாடிவருவதாகக் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வன்னியில் நடைபெற்ற போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த போது தமது கால்நடைகள் பலவற்றையும் கைவிட்டுசெல்ல நேர்ந்தது.
அந்தக் கால்நடைகள் கட்டாக்காலிகளாக அப்பகுதிகளில் கூட்டம் கூட்டமாக அலைந்து திரிந்து வருகின்றன.
இந்நிலையில் அந்தக் கால்நடைகளை தற்போது மீள்குடியமர்ந்துள்ள அவற்றின் உரிமையாளர்கள் இனங்கண்டு பிடித்து வருகின்றனர்.
இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர், கால்நடைகளின் உரிமையாளர்கள் அல்லாதோர் கட்டாக்காலியாகத் திரியும் கால்நடைகளை சட்டவிரோதமான முறையில் பிடிப்பதோடு, அவற்றை இறைச்சிக்காக வெட்டவும் செய்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தச் சட்டவிரோதமான செயற்பாடு வன்னியில் பல இடங்களில் நிகழ்ந்தாலும் பரந்தன், முதலாம் கட்டைக்கருகில் உள்ள கோரக்கன்கட்டு என்ற பகுதியிலேயே அதிகம் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெட்டப்படும் கால்நடைகளின் இறைச்சி பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கம் மீளமைக்கப்படவுள்ள நிலையில் இத்தகைய சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை பிடித்து, அவற்றை இறைச்சிக்காக வெட்டுவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என கால்நடைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025