2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கல்வி வாய்ப்பை பெறமுடியாத நிலையில் பூநகரி சிறுவர்கள்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

பூநகரிப் பிரதேசத்தில் 200க்கு மேற்பட்ட சிறுவர்கள் கல்வி வாய்ப்பைப் பெறமுடியாத நிலையில் உள்ளனர் என அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தச் சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பில் இருப்பவர்கள் என்றும் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் பொருளாதார நிலை இங்கே மிகவும் பின்தங்கியிருப்பதே இதற்குக் காரணம் என்றும் இந்த அவதானிப்பில் தெரியவந்துள்ளது.

பூநகரிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடா, கிராஞ்சி, முட்கொம்பன், குமுழமுனை போன்ற கிராம அலுவலர் பிரிவுகளிலேயே இந்தநிலை அதிகம் காணப்படுகிறது.

குடும்பங்களின் வறுமை நிலை காரணமாகவே பெரும்பாலான சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வதில்லை எனவும் சில குடும்பங்களில் சிறுவர்களைப் பெற்றோர் தம்முடன் வேலைக்குக் கூட்டிச் செல்வதால் இவர்கள் பாடசாலைக்குச் செல்லமுடியாதிருப்பதாகவும் இந்த அவதானிப்பின்போது தெரியவந்துள்ளது.

இதேவேளை புனர்வாழ்வளிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட முன்னாள் போராளிகளுக்கு எதுவிதமான உதவிகளும் கிடைக்காத காரணத்தினால் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கான ஏற்பாடுகள் இல்லாமலிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் பூநகரிப் பிரதேச செயலர் பிரிவில் 38 பேர் உள்ளதாக மேற்படி ஆய்வில் தெரியவந்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .