2020 நவம்பர் 25, புதன்கிழமை

வவுனியாவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – புளொட் பிரதிநிதிகள் சந்திப்பு

Super User   / 2011 ஜனவரி 18 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

தமிழத் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், புளொட் சிரேஷ்ட உள்ளூர் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று செவ்வாய் காலை 10 மணியளவில் வவுனியா வைரவ புளியங்குளத்தில் நடைபெற்றது.
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கமும் புளொட் அமைப்பின் சார்பில் முன்னாள் நகர பிதா ஜி.ரி.லிங்கநாதன், மத்திய குழு உறுப்பினர் கந்தையா சிவநேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது இரு தரப்பினரும் சுமார் இரு மணி நேரம் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .