Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.விவேகராசா)
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாத அதிகாரம் உள்ளூராட்சிமன்ற சபை உறுப்பினர்களுக்கு உள்ளது. எனவே தான் வன்னியில் அனைத்து சபைகளையும் நாம் கைப்பற்றவேண்டு;ம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
வவுனியா, நெடுங்கேணி மற்றும் வெங்கல செட்டிகுளம் பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை காலை வவுனியா வசந்தம் விடுதியில் நடைபெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
வன்னி ஒரு வளமுள்ள மிகப்பெரிய பிரதேசம். நிலவளமும் கடல் வளமும் உள்ளது. இங்குள்ள கிராமங்களை அபிவிருத்தி செய்ய உள்ளூராட்சிமன்ற சபைகளை எமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வீட்டு சின்னத்தில் களம் இறங்கியுள்ளமை எமக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும். தமிழர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தோற்றார்கள் அல்ல இந்த மனப்பாங்கு இருக்கக் கூடாது. இந்த தேர்தலில் போட்டியிட வன்னியில் உள்ள இளம் வேட்பாளர்கள் பலர் முன்வந்துள்ளார்கள். புதுமுகங்கள் வரவேண்டும். இதனை வரவேற்கின்றோம்.
கடந்த பொதுத் தேர்தலில் எம்மை பலவீனப்படுத்த பலர் முயற்சிகள் நடைபெற்றது. எதுவுமே பலிக்கவில்லை. தமிழ் மக்களுடைய குரலாக நாம் நாடாளுமன்றத்தில் ஒலித்துக்கொண்டுள்ளோம். முல்லைத்தீவில் கேப்பாபுலவு, மாங்குளத்தில் சாந்தபுரம், மன்னாரில் சில இடங்களிலும் இராணுவம் தனது தேவைக்கு பெருமளவு தமிழர்களுடைய காணிகளை சுவீகரித்து வைத்துள்ளது. இதுபற்றி நாம் ஜனாபதிபதியுடன் நடைபெற்ற சந்திப்புக்களில் பிரஸ்தாபித்துள்ளோம்.
அரசியல் தீர்வு என்று வரும்போது நாம் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை. இந்தியா அரசினால் மனிதாபிமான உதவியாக வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் எமது மக்களுக்கு பூரணமாக கிடைக்கவில்லை. இதுபற்றி இந்திய தூதுவரிடம் முறையிட்டுள்ளோம். மார்ச் 17ஆம் திகதி நடைபெறப்போகும் தேர்தல் என்பது முக்கியமானது. எங்களுடைய வேட்பாளர்கள் கடுமையாக உழைத்து சபைகளை கைப்பற்ற வேண்டும். வாக்களிப்பின் ஆர்வத்தை மக்கள் மத்தியில் அதிகரிக்க செய்யவேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் முகாம்களுக்குள் இருந்த மக்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் ஆர்வத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்துள்ளமையினை நாம் காணுகின்றோம். ஆனால் வெளியே நடமாடக்கூடியவர்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டவில்லை தெரியவந்துள்ளது. இம்முறை சகலரையும் வாக்களிக்க செய்யவேண்டிய கடமை வேட்பாளர்களுக்குரியது என்றார்.
.jpg)
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago