2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வவுனியா வடக்கு ப.நோ.கூ.சங்க விசாரணை தாமதம்; உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா வடக்கு நெடுங்கேணி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற நிதி மோசடி குறித்த விசாரணை தாமதமடைவதாகக் கூறி புளியங்குளம் சந்தியில் உண்ணாவிரதம் இருந்த இருவர் இன்று வியாழக்கிழமை உண்ணாவிரத்தை கைவிட்டதாக வவுனியா மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் கே.ரவீந்திரநாதன் தெரிவித்தார்.

பொதுமக்களுடைய சங்க பணத்தை பொதுமுகாமையாளர் துஷ்பிரயோகம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்டிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நடைபெறும் விசாரணைகள் தாமதமடைந்து வருகின்றது என சுட்டிக்;காட்டி நெடுங்கேணியைச் சேர்ந்த இருவர் புளியங்குளத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் நேற்று புதன்கிழமை  முதல் ஈடுபட்டனர்.

இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற கூட்டுறவு  உதவி ஆணையாளர் மற்றும் வன்னி எம்.பி. சிவசக்தி ஆனந்தன், நகரசபை எதிர்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உண்ணாவிரதம் இருப்பவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X