2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மன்னார் மாவட்ட உள்ளூராட்சிசபை உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளுராட்சிசபை உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கொன்று  இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணி முதல் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டிலும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் ஆலோசனைக்கமையவும் நடைபெற்ற இந்த  கருத்தரங்கில், மன்னார் நகரசபை மற்றும் 4 பிரதேசசபைகளிலும் வெற்றி பெற்ற 46 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில் வடமாகாண ஆளுநரின் இணைப்பாளர் டீன், மன்னார் நகரசபையின் செயலாளர் திருமதி.வி.குறுஸ், மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்.ஏ.ஜே.துரம், மாந்தை மேற்கு பிரதேசசபையின் செயலாளர் ஜெனிங்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .