Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கபில்)
வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஈரப்பெரியகுளம் நவகும்ப பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தனசிங்க (வயது 35) என்பவரே விபத்தில் பலியானவர் ஆவார்.
வானுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவரே இந்த விபத்தில் பலியானார்.
குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .