Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் வலயக் கல்வித் திணைக்களத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்படும்போது அல்லது ஓய்வு பெறுகின்றபோது அவருக்கு அடுத்ததாக உள்ளவருக்கு அல்லது மன்னாரின் விகிதாசாரத்திற்கு அமைவாக புதிய நியமனம் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் வலயக் கல்வித் திணைக்களத்திற்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ள புதிய வலயக்கல்வி பணிப்பாளருக்கு மன்னாரின் விகிதாசாரத்திற்கு மாறாக நியமனம் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டு தற்போதுள்ள வலயக்கல்வி பணிப்பாளருக்கு அடுத்ததாக உள்ளவருக்கு அல்லது விகிதாசாரத்திற்கு அமைவாக நியமனம் வழங்கப்பட வேண்டும். இதற்கு மாறாக நியமனம் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் மன்னாரில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை தான் மேற்கொள்ளவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
19 minute ago
25 minute ago
08 Dec 2025
08 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
08 Dec 2025
08 Dec 2025