2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மன்னாரில் பெரும்போக நெற்செய்கை அழிவடையும் சாத்தியம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மல்வத்துஓயா பெருக்கெடுத்தமையாலும் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்தமையாலும் மன்னார் மாவட்டத்தில் ஆயிரக்கணக்காண ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிவடையும் நிலையிலுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின்  நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களிலும் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  இந்நிலையில், இக்கிராமங்களில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வயல்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நெற்செய்கை அழிவடையுமளவிற்கு வெள்ளநீர் வயல்களில் தேங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் இம்முறை 50 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்பயிர்ச்செய்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .