2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மன்னாரில் மீன்பிடித்தொழிலில் மந்தநிலை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக மீன்பிடித் தொழிலில் பாரிய மந்த நிலை ஏற்பட்டுள்ளமையினால் மீனவக் குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

காலநிலை மாற்றம் காரணமாக கடலில் காற்று வீசி வருகின்ற நிலையில் மீன்பிடி குறைவாக காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் அதிகளவான எரிபொருட்களை பயன்படுத்தி தொழிலுக்குச் செல்கின்றபோதும், எரிபொருட்களுக்கு செலவிடுகின்ற பணத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தாம் உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மன்னாரில் கடல் உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு,  கடல் உணவுகளின் விலையும் மன்னாரில் தற்போது அதிகரித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--