2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

மின்சார சபைக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஞானப்பிரகாசம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான தெரு மின்விளக்குகளின் பராமரிப்புக்கும் மின் கட்டணத்திற்கும் வருடா வருடம் மன்னார் நகர சபை பாரிய நிதியை ஒதுக்கீடு செய்கின்றபோதும், மன்னார்  மின்சார சபை உரிய முறையில் தெரு மின்விளக்குகளை பராமரிப்பதில்லை என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மன்னார் நகரசபை தனது  பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நகரசபை பிரிவுக்கு உட்;பட்ட தெருமின் விளக்குகளின் திருத்தம், பாதுகாப்பு, மின்கட்டணம் போன்றவற்றிற்கு மன்னார் நகரசபை மன்னார் மின்சார சபைக்கு பணம் வழங்குகின்றது.

இதன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கான தெரு மின்விளக்குகளுக்கான மின்கட்டணமாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினையும் ஒரு வருடத்திற்கு மின்விளக்குகள் பராமரிப்பு, திருத்துவதற்காக மின்சார சபைக்கு 2 இலட்சம் ரூபாவையும் மன்னார் நகரசபை மின்சார சபைக்கு வழங்குகின்றது.

மின் கம்பங்களில் திருத்த வேலைகள் இருந்தால் மன்னார் நகர சபை ஊழியர்களையும் வாகனங்களையும் அனுப்புகின்றது. சகல உதவிகளையும் மேற்கொண்டும் மன்னார் மின்சார சபை உரிய முறையில் தமது பணியினை செய்வது இல்லை. மன்னார் நகர சபைக்கு உட்பட்ட பல இடங்களில் இரவு நேரங்களில் தெரு மின்விளக்குகள் ஒளிர்வதில்லை.

இதனால் விபத்துக்களும் சீர்கேடுகளும் இடம்பெறுவதாக முறைப்பாடு கிடைக்கின்றது. தெரு மின் விளக்குகள் ஒளிராததன் காரணத்தினால் மக்கள் மன்னார் நகர சபையில் வந்து முறைப்பாடுகள் செய்கின்றனர். நாங்கள் பல தடவை அவர்களுக்கு அறிவித்தும் உரிய முறையில் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.

நாங்கள் எவ்வித வருமானமும் இன்றி மக்களின் வரிப்பணத்தில் இவர்களுக்கு பணம் வழங்குகின்றோம். எனவே, மன்னார் மக்கள் மன்னார் மின்சார சபைக்கு எதிராகவே இனி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--