2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

210 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Niroshini   / 2021 ஜனவரி 13 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தனுஸ்கோடி அருகே உள்ள மூன்றாம் தீடையில், நேற்று (12), 150 கிலோகிராம் கஞ்சா கரையொதுங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளது.

தனுஸ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்த இருப்பதாக, மண்டபம் கடலோர காவல் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடி, கடற்படை, மெரைன் பொலிஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மூட்டைகளை மண்டபத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

மேலும், இராமேஸ்வரம் உளவுத்துறை அதிகாரிகள்கு கிடைத்த தகவலையடுத்தது, தனுஸ்கோடி பகுதியில் 2 மூட்டைகளில் சுமார் 60 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
ஐகப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளின் பெறுமதி 31 இலட்சம் ரூபாய் பெறுமதியென தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .