Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 30 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
1955: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பின பெண், பஸ்களில் வெள்ளையினத்தவர்களுக்கு கறுப்பினத்தவர்கள் தமது ஆசனங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை மீறி வெள்ளையினத்தவருக்கு ஆசனம் கொடுக்க மறுத்தார். இச்சம்பவம் அமெரிக்க கறுப்பினத்தவர்களின் சிவில் உரிமை போராட்டத்தில்தில் திருப்புமுனையாக அமைந்தது.
1963: நாகலாந்து இந்தியாவின் 16 ஆவது மாநிலமாகியது.
1971: பாகிஸ்தான் கைப்பற்றியிருந்த காஷ்மீர் பகுதியொன்றை மீண்டும் இந்தியா கைப்பற்றியது.
1973: இஸ்ரேலின் ஸ்தாபகத் தந்தை டேவிட் பென் குரியோன் தனத 87 ஆவது வயதில் காலமானார்.
1981: எய்ட்ஸ் வைரஸ் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
1982: அமெரிக்காவின் உட்டா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை மூலம், பேர்னி கிளார்க் என்பவர் உலகில் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதரானார்.
1989: கிழக்கு ஜேர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரசாங்கத்தில் முதன்மைபாத்திரம் வழங்கும் அரசியலமைப்பு நீக்கப்பட்டது.
1990: பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.
1991: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதற்கு உக்ரைன் மக்கள் சர்வஜன வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago