Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கி.மு. 331: மகா அலெக்ஸாண்டர் மன்னன், பேர்சியாவின் 3 ஆம் டேரியஸை தோற்கடித்தார்.
1653: உக்ரேனை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு ரஷ்ய நாடாளுமன்றம் அங்கீகாரம்.
1795: பெல்ஜியத்தை பிரான்ஸ் கைப்பற்றியது.
1843: லண்டனில் நியூஸ் ஒவ் த வேர்ல்ட பத்திரிகை முதல் தடவையாக வெளியாகியது.
1869: உலகின் முதலாவது தபாலட்டையை ஆஸ்திரியா வெளியிட்டது.
1949: சீன மக்கள் குடியரசு மாவோ சேதுங்கினால் பிரகடணம்.
1958: அமெரிக்காவில் தேசிய விண்வெளி ஆலோசனைக் குழுவுக்குப் பதிலாக அமைக்கப்பட்ட தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (நாசா) செயற்படத் தொடங்கியது.
1962: அமெரிக்காவின் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் முதல்தடவையாக கறுப்பின மாணவர் ஒருவர் சேர்க்கப்பட்டதையடுத்து இடம்பெற்ற நிறவெறி மோதல்களில் இருவர் கொல்லப்பட்டு 75 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
1970: மாரடைப்பால் காலமான எகிப்திய ஜனாதிபதி கமால் நாஸரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோரில் சன நெரிசலில் சிக்கி 48 பேர் பலி.
1975:முஹமட் அலிக்கும் அவரின் பிரதான போட்டியாளருக்கும் இடையில் மணிலாவில் நடைபெற்ற புகழ்பெற்ற போட்டியில் அலி வெற்றிபெற்றார். 14 சுற்றுகளுக்கு இப்போட்டி நீடித்தது.
1979: பனாமா கால்வாயின் இறைமை அமெரிக்காவிடமிருந்து பனாமாவுக்கு வழங்கப்பட்டது.
2005: இந்தோனேஷியாவின் சுற்றுலாத்தலமான பாலி தீவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago