2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 26

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1815: ரஷ்யா, பிரஷ்யா (ஜேர்மனி), ஆஸ்திரியா ஆகியனவற்றுக்கிடையில் புனிதக் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1954: ஜப்பானிய கப்பலொன்று சுகாரு நீரிணையில் மூழ்கியதால் 1172 பேர் பலி.

1959: பௌத்த பிக்குவால் செப்டெம்பர் 25 இல்  சுடப்பட்ட இலங்கைப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மரணமடைந்தார்.

1960: அமெரிக்காவில் முதல் தடவையாக ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுக்கிடையிலான விவாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ரிச்சர்ட் நிக்ஸனும் ஜோன் எவ். கென்னடியும் பங்குபற்றினர்.

1984: 150 வருடங்களாக பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்த ஹொங்கொங் தீவை 1997 இல் மீண்டும் சீனாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக இரு நாடுகளும் இணக்கம் கண்டன.

1989: சோவியத் யூனியனும் அமெரிக்காவும் தம்மிடமுள்ள இரசாயண ஆயுதங்களை அழிக்க வேண்டும் என சோவியத் வெளிவிவகார அமைச்சர் எட்வர்ட் ஷெவார்டெனாட்ஸ் வலியுறுத்தினார்.

1992: நைஜீரிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதால் 163 பேர் பலி

1997: இந்தோனேஷியாவில் விமானம் விபத்துக்குள்ளானதால் 234 பேர் பலி

2001: பலஸ்தீன ஜனாதிபதி யசீர் அரபாத்தும் இஸ்ரேலிய வெளிவவிகார அமைச்சர் சிமோன் பெரோஸும் போர்நிறுத்தத்தற்கான திட்டங்கள் குறித்து அறிவித்தனர்.

2002: அளவுக்கதிமாக ஆட்கள் ஏற்றப்பட்ட செனகல் நாட்டின் படகொன்று காம்பியாவுக்கு அருகில் கவிழ்ந்ததில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--