Super User / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
1399: இங்கிலாந்தின் மன்னராக நான்காம் ஹென்றி தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டார்.
1882: உலகில் முதலாவது வர்த்தக ரீதியான நீர்மின்சார நிலையம் அமெரிக்காவி;ன் அப்பிள்டன் நகரில் செயற்படத் தொடங்கியது.
1938: பிரிட்டன் ,பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் அதிகாலை 2 மணியளவில் மூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன். இதன் மூலம் செக்கஸ்லோவாக்கியாவின் சுடென்லன்ட் பிராந்தியத்தை ஜேர்மனி ஆக்கிரமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
1943: சோவியத் யூனியனின் பாபி யராவின் (தற்போதைய உக்ரேன்) நகரில் 3721 யூதர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.
1947: பாகிஸ்தான், யேமன் ஆகிய நாடுகள் ஐ.நாவில் இணைந்தன.
நாடுகள்.
1989: செனகாம்பிய என்ற பெயரில் 1982 முதல் இணைந்திருந்த செனகலும் காம்பியாவும் மீண்டும் பிரிந்தன.
1968: போயிங் 747 விமானம் முதல் தடவையாக தொழிற்சாலையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
1981: தென்கொரியாவின் சியோல் நகரம் 1988 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நகரமாக தெரிவு செய்யப்பட்டது.
1993: இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தின் லத்தூர் மற்றும் ஒஸ்மனாபாத் மாவட்டங்களில் பூகம்ப தாக்கத்தால் சுமார் 8000 பேர் பலி.
1994: அமெரிக்காவிலிருந்து மொஸ்கோவுக்கு செல்லும் வழியில் அயர்லாந்தில் அந்நாட்டுப் பிரதமரை சந்திப்பதற்கு ரஷ்ய ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் இணங்கினார். ஆனால் விமானத்தில் யெல்ட்ஸின் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததன் காரணமாக இச்சந்திப்பு இடம்பெறவில்லை.
2005: டென்மார்க் பத்திரிகையான ஜீலண்ட் போஸ்ட்டில் முஹம்மது நபி குறித்த சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரம் வெளியானது.
13 minute ago
19 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
24 minute ago