2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (23.01.2011 - 29.01.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (23.01.2011 - 29.01.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பார்ப்பதற்கு கடினமாகவும் பழகும்போது வெகுளியாக செயல்படும், மனதில் பட்டதை பேசும் மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் குடும்பத்தில் சுபவிசேஷங்களினால் உறவினர்கள் ஒன்றுகூடல். தூரபிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம். வியாபாரம் தொடர்பான திட்டங்களை மேம்படுத்த அரசாங்க உதவிகள் கிடைக்க கூடும். தூய்மையான ஆடைகளை அணியலாம். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இசையில் ஈடுபாடு அதிகரிக்கும், அதனால் மனஅமைதி ஏற்படக்கூடும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும். நீண்ட நாள் எதிர்பார்த்த நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். இவ்வார இறுதியில் இறைவன் துணையால் மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
ஜனவரி 27ஆம் திகதி காலை 01.27 மணியிலிருந்து ஜனவரி 30ஆம் திகதி காலை 08.07 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அமைதியாக இருக்கும் நீங்கள் பகைவர்களை கண்டு துணிவோடு செயல்படும் உறுதி உள்ளம் பெற்ற இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் செலவுகள் சற்று அதிகரிக்கும். எதிர்பாராத சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும். புதிய வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மனதில் தேவையற்ற சலனங்கள் நீங்கி உற்சாகம் கிடைக்கும். குடும்பத்தில் பெண்களின் அனுசரிப்பு அதிகரிக்க கூடும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும், பொறுமையுடன் செயல்படவும். ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வார இறுதியில் தெய்வீக வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைப்பதுடன் தொடங்கிய காரியத்தில் வெற்றி பெறலாம்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஒன்றுபட்டு வாழ்ந்தால் உண்டு வாழ்வு என்ற கொள்கையையும் சீர்திருத்த எண்ணங்களையும் உடைய மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அதிக செலவு செய்யநேரிடும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு தேடிவருதல், இதனால் அதிக பணவரவு ஏற்படும். அறுசுவையான உணவு உண்ணலாம். குடும்பத்தில் பெண்களுடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். அரசாங்க ஊழியர்களின் உதவியுடன் புதிய வேலைப் பணிகளை செயல்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பகைவர்களுடன் வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளை பிரயோகிக்கும்போது நிதானம் தேவை. வெளிதேசங்களிருந்து இன்பகரமான செய்திகளை கேள்விபடுவீர்கள். வார இறுதியில் பிறரின் உதவியுடன் நன்மையான காரியங்களில் ஈடுபடலாம்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

வாழ்வில் துயரங்களை பொருட்படுத்தாது முன்னேற்றத்தை மட்டும் சிந்திக்கும் கனிவான உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் தீய நண்பர்களின் சகவாசங்களினால் அனாவசிய பிரச்சினைகளை எதிர்நோக்கநேரிடும். வியாபாரம் தொடர்பான திட்டங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்ப உறவினர்களுடன் விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. விசித்திரமான பொருள் காணக் கிடைத்தல். சில மனதுக்கு பயத்தை உணர்த்தும் சம்பவங்கள் நடக்கக்கூடும். மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து நடப்பது நன்மைக்கே. புதிய ஆடை, ஆபரணங்கள் பரிசாக கிடைக்க கூடும். மாணவர்கள் கல்வியில் நவீன சாதனைகளை வெளிக்காட்டுவதன் மூலம் வெற்றி அடையலாம். எதிர்பாராத நல்ல செய்திகள் உரிய நேரத்தில் வந்து சேரும். வார இறுதியில் இறைவழிபாடு செய்வதில் அக்கறை செலுத்துவதால் மனசங்டங்களை தவிர்த்து கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எளிமையும் மிகவும் நேசிக்கும் வலிமையான குணமும் கொண்ட, எந்த காரியத்தையும் நேர்மையாக செய்யும் சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் வியாபாரத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் புதிய வேலைப் பணிகளை நடைமுறைப்படுத்தலாம். சில இடமாற்றங்களுக்கு வழியுண்டு. கடின உழைப்புடன் செயல்படுவதால் அதிக பணவரவு ஏற்படும். இசையில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். நண்பர்களுடன் சுற்றுலா பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் பரிபூரண கவனம் செலுத்தவும். அரசாங்க வேலை வாய்ப்புக்கள் தேடிவரக்கூடும். பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, அவதானம் தேவை. இனிய தூக்கம் மனநிறைவை தரும். வார இறுதியில் மனதில் உள்ள குழப்பங்கள் தெளிவுபெறுவதுடன் இன்பகரமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
வழிபாடு: நவகிரகம்




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பாராட்டுகளை அதிகம் விரும்பும் பொலிவான தோற்றத்தினை இயற்கையாக பெற்ற கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் புதிய காரியங்கள் நடைமுறைபடுத்துவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பகைவர்களினால் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும், இதனால் பணப்பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் பெண்களுடன் அனுசரித்து நடப்பதால் நன்மை. உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். நாவுக்கு சுவையான உணவு உண்ணலாம். நெருங்கிய நண்பர்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. சேமிப்பைவிட செலவுகள் சற்று அதிகரிக்கும். மனதில் சிறு சோர்வுகள் தோன்றி மறையும். வார இறுதியில் நமது வழிகாட்டிகளாக இருக்கும் பெரியார்களை கண்டு ஆசீர்வாதம் பெறவாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

அன்புகாட்டும் உள்ளங்களுக்கு அடிபணிந்தவராக துன்பத்தில் இருப்பவர்களுக்கு தோள் கொடுக்கும் உள்ளம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் உல்லாச பிரயாணங்களின்போது புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஒற்றுமையுடன் செயல்படல். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கி சிறப்பான வேலைத் திட்டங்களை கையாண்டு வெற்றி அடையலாம். பொருள் சேர்க்கை ஏற்படக்கூடும். தூய்மையான ஆடைகளை அணியலாம். பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். மேல் உத்தியோகத்தருடன் அதிக பேச்சுக்கள் மனகசப்புகளை ஏற்படுத்தும், வார்த்தைகளை நிதானத்துடன் பிரயோகிக்கவும். வார இறுதியில் நமது வாழ்க்கையில் நன்மை பயக்கும் இறைவனுக்கு முதலிடம் அளிப்பது சாலச்சிறந்ததாகும்.   

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

மற்றவர்களை எளிதில் நம்பாத எதிலும் தனித்து செயல்படும் குணமும் காலத்தை உணர்ந்து அதற்கேற்ப வாழ்க்கை அமைத்து கொள்ளும் விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் குடும்பத்தில் நலன்விரும்பிகளின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். அழகிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்கக்கூடும். தொழில் சம்பந்தமான சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும். இசையில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள், இதனால் மனஅமைதி கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உரிய நேரத்தில் கிடைக்கும். பெண்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கக்கூடும். நவீன சாதனைகளை வெளிப்படுத்தி முன்னேற்றம் அடையலாம். உடலால் சில சிரமங்கள் ஏற்படக்கூடும், நலனில் அதிக கவனம் செலுத்தவும். பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் அது நமக்கே பகையை உண்டாக்கும், வார இறுதியில் புதிய செய்திகள் சிறு அலைச்சலை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தனது மனதுக்கு பிடித்தபடி சுகந்திரமாக செயல்படவும் பிறருக்கு நலனில் மிக அக்கறை கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் புதிய முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியங்களின்போது உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். நிம்மதியான உறக்கம் உடலுக்கு புத்துணர்ச்சி தரும். அன்றாட வேலைத்திட்டங்களை சுறுசுறுப்புடன் செயல்படுத்தலாம். ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதன் மூலம் மனதில் குழப்பங்கள் நீங்கும். பெரியார்களின் அறிவுரைகள் வாழ்க்கைக்கு நல்வழிநடத்தலை ஏற்படுத்தும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கக்கூடும். வியாபாரம் தொடர்பான திட்டங்களுக்கு அதிக அலைச்சலை மேற்கொள்ளவேண்டிருக்கும். வெளிப்பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம். அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். வார இறுதியில் பகைவர்களிடம் விலகி செயல்படுவதனால் அனாவசிய பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடமை உணர்வோட வாழ்வில் வேகமாக சூழலும் மென்மையான உள்ளம்கொண்ட மகர ராசி அன்பர்களே..!

இந்தவார ஆரம்பத்தில் பணவரவு சற்று காலதாமதத்தை ஏற்படுத்தும், பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு அவசியம். தொழில் ஸ்தானத்தில் உயர் அதிகாரிகளினால் மறைமுக போட்டிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும், பொறுமையுடன் செயல்படவும். அரசாங்க வேலைவாய்ப்பு தேடிவர கூடும். பெண்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். நீண்டநாள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தாருடன் புண்ணியதலங்கள் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும், உடல் சோர்வுகள் வந்து நீங்கும். வார இறுதியில் தேக ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதால் நோயற்ற வாழ்க்கையை வாழலாம்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
ஜனவரி 21ஆம் திகதி மாலை 06.45 மணியிலிருந்து ஜனவரி 23ஆம் திகதி மாலை 07.27 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.


 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எந்த காரியத்தையும் திட்டவட்டமாக செய்து முடிக்கும் ஆற்றலும் பிறர் பார்வையில் கவர்ச்சியாக தென்படும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நவீன சாதனைகளை எளிதாக கையாண்டு நன்மை அடைவீர்கள். விநோதங்கள் விபரிதத்தை ஏற்படாத வண்ணம் செயல்படவும். தொலைதூர செய்திகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபார உத்தியோகத்தர்கள் தமது வேலைப் பணிகளை உற்சாகத்துடன் மேற்கொள்வார்கள். குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விசித்திரமான பொருள் காணக்கிடைக்கும். அநாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்த்து, பணம் சேமிப்பதில் அதிக ஊக்கம் செலுத்தவும். திருட்டுக்களினால் மனபயங்கள் ஏற்படக்கூடும். அறுசுவையான உணவு கிடைக்கும். வார இறுதியில் தமது கடமையை மட்டும் சரியாக செய்து மேன்மை அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
ஜனவரி 23ஆம் திகதி மாலை 07.27 மணியிலிருந்து ஜனவரி 25ஆம் திகதி மாலை 9.20 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.
 

 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

பிறருக்கு முன் உதாரணமாக விளங்கும் வாழ்வில் சில சந்தர்ப்பங்களில் அதிக ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் சில நிகழ்வுகள் ஏற்படக்கூடும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். அறிமுகமற்ற நண்பர்களினால் சில சிக்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் உயர் அதிகாரிகளுடன் சுமூகமாக செயல்படுவதால் நன்மைக்கே. பெண்களின் அனுசரிப்பு அதிகரிக்கக்கூடும். புதிய வேலைத் திட்டங்களின்போது பணத்தட்டுப்பாடுகள் ஏற்படும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படும், இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். ஆன்மீக சிந்தனைகள், தியானங்கள் மனஆறுதலை தரும். வார இறுதியில் மற்றவர்களின் பிரச்சினைகளை முன்னிற்பதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
வழிபாடு: சிவன் (சந்திரன்)

சந்திராஷ்டமம்:
ஜனவரி 25ஆம் திகதி மாலை 9.20 மணியிலிருந்து ஜனவரி 27ஆம் திகதி காலை 01.27 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்துதல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--