2021 ஜனவரி 16, சனிக்கிழமை

அன்பிலிருந்து மலர்வதே பண்பாகும்

Princiya Dixci   / 2016 ஜூலை 12 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாம் யாரிடத்தேயாயினும் உதவிகளைப் கோரும்போது, வெட்கம் தலைதூக்கி விடுகின்றது. இந்தக் குணம் எல்லோருக்கும் இருப்பதில்லை.

கட்டாயமாக நீங்கள் இந்த உதவியைச் செய்தேயாக வேண்டும் எனச் சிலர் வீம்புடன் கேட்பதுண்டு. ஆனால், ஒருவர் மீது உள்ள உரிமை காரணமாகவும் கண்டிப்பான உத்தரவிடும் தோரணையுடன் கேட்டுப்பெறும் இயல்பு சிலருக்குண்டு.

எந்தத் தருணத்திலும் எம்மில் வயது குறைந்தோரிடம், குழந்தைகளிடம் கூட கனிவாகக் கேட்டுக் கொள்வதே உயர் பண்பாகும்.

பண்பு என்பது கூட அன்பிலிருந்து மலர்வதேயாகும். நானே உயர்ந்தவன் எனும் இறுமாப்புப் பற்றினாலே, அடுத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் பண்பு அகன்று விடுகின்றது.

இன்முகத்துடன் அனைவரிடமும் பழகுவதே ஒருவருக்கு வழங்கும் கௌரவம் ஆகும். சுயநலத்துக்காக முகம் மலருதல் ஏமாற்றும் செயல்தான்.

வாழ்வியல் தரிசனம் 12/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .