2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

‘நடுங்கி வாழ்வது வாழ்க்கை​யே அல்ல’

Editorial   / 2017 மே 24 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முறைகேடாக வாழ்ந்து வருபவர்களை, நேர்மையுடன் வாழ்பவர்கள் கவலையுடன் நோக்குவார்கள். 

“என்ன இந்த மனுஷன் எங்களைப்போல வாழ்ந்தால், எவ்வளவு காசுக்காரனாக இருந்திருக்கலாம். சும்மா கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனச் சொல்லி என்னத்தைச் சாத்தித்து விட்டார்” எனத் தன்னைப் போல, வாழ்பவர்களுடன் சொல்லிக் கொள்வதுண்டு.  

வாழ்க்கையென்றால் என்ன என்று, முதற்கண் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து, என்ன நடக்கப்போகின்றது என அஞ்சி, நடுங்கி வாழ்வது ஒரு வாழ்க்கை​யே அல்ல; இத்தகையோர் வெளியே சிரித்துக் கும்மாளமடித்தாலும், அவர்களின் உள்மனம், சதா சலனம், சஞ்சலம் கொண்டதாகவே இருக்கும்.   

விடுபட முடியாத போலியானதும் போக்கிரித்தனமானதுமான வாழ்க்கை  வாழ்ந்தால் துன்பமே வாழ்க்கையை  ஆக்கிரமித்திருக்கும்.

   வாழ்வியல் தரிசனம் 24/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .