2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

மனஒடுக்கம் உலகைக் கையில் அடக்கும்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதர் தங்கள் மூளையினை முழுமையாகப் பாவிப்பதில்லை. ஆனால், தீர்க்கதரிசிகளும் யோகிகளும் தங்கள் தபஸ் மூலம் தங்கள் உடலையும் சித்தத்தையும் விருத்தி செய்து கொண்டார்கள். 

இதனாலேயே மூளையின் முழுப் பயன்களை இவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அறிவின் மேலாம் ஞானத்தைக் கல்வி மூலம் பெற்றுக் கொள்ள முடியாது. 

இ​தயத்தை இறைவன்பால் அர்ப்பணித்தால் மட்டுமே ஞானம் பெற முடியும். ஆத்மாவின் பலம் அளவிட முடியாது. ஆனால், நாங்கள் உலக யதார்த்த வாழ்க்கைக்கு மட்டுமே மூளையைப் பாவிக்கின்றோம். அகத்தினூடான சிந்தனையை வளர்த்திட யோகப் பயிற்சி அவசியமானது. இதனால் முக்காலத்தை அறிய முடிவதுடன் மனிதர்களால் செய்யப்படும் காரியங்களைவிட, மிக அற்புதமான அதிசயங்களையும் வெ ளிப்படுத்த முடியும். மனஒடுக்கம் உலகைக் கையில் அடக்கும்.

வாழ்வியல் தரிசனம் 21/12/2016

பருத்தியூர் பால – வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .