2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

விட்டுக்கொடுக்கும் இல்வாழ்வில் பிரச்சினைகள் எழவே எழாது

Administrator   / 2016 டிசெம்பர் 15 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொறுமையில்லாத காதலர்கள் வாய்த்தர்க்கத்தினால் வீம்புகொண்டு, பிரிந்து கொள்வதுண்டு. காதல் அரும்பும் நிலையிலேயே, ஒருவரை ஒருவர் புரியாமல் நடந்து கொண்டு, நல்ல பண்புள்ள ஆண் மகனும் நற்குணமுடைய மங்கையும் சச்சரவுக்குள்ளானால் பாதிப்படைவது யார்?  

திருமண வாழ்க்கையில் காலஓட்டங்களே காதலை ஸ்திரப்படுத்துகின்றன. ஓரிரு நாட்கள், மாதங்களுக்குள் நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுவிட்டோம் எனச் சொல்லுவது சரியானதாக ஏற்றுக் கொள்ள முடியுமா?  
ஆனால், விட்டுக்கொடுக்கும் இல்வாழ்வில் இந்தப் பிரச்சினைகள் எழவே எழாது. ஒருவர் தியாகத்தை ஒருவர் உணர, முதிர்ச்சியடைய காலநேரமும் அனுபவங்களும் தேவை.   

எந்தப் பொல்லாத தம்பதியினரும் பொறுமை, நிதானம், மாறாஅன்பு கொண்டால் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து வாழும் குணமிருந்தால் மென்மையான பூக்களாகி விடுவர். காதலே கனிவு; என்றும் நீடிக்கும் இனிது.  

- பருத்தியூர் பால. வயிரவநாதன் 

வாழ்வியல் தரிசனம் - 15/12/2016 
   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .