2021 மே 12, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 20/11/2015

Princiya Dixci   / 2015 நவம்பர் 20 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்மா‚ நான் உன் கருவறையில் இருந்தவரை நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும், உன்னுடன் ஐக்கியப்பட்ட வண்ணம் இதுவே உலகம் என எண்ணியிருந்தேன்.

உன்னிடமிருந்து போஷனையைப் பெற்றேன். உன் மணிவயிற்றைக் உன் கரம் கொண்டு தடவுகையில் அதன் ஸ்பரிஸத்தை உள்ளிருந்தே நுகர்ந்தேன் தாயே‚ இருளிலும் அற்புதமான உலகம் இது, என்பதை கருவிலேயே உணர்ந்தேன் அம்மா‚

ஆனால் நான் வெளியே வந்தபோதுதான் இந்த வெளி உலகின் ஆரவாரம், பேரிரைச்சல், புற உலகம் பொய்மைகளைப் புரிந்து கொண்டேன்.

ஆயினும் நான் இங்கு வாழ்ந்துதான் ஆகவேண்டும். என்னை என்றும் ஆசீர்வாதம் செய் அம்மா‚ ஒரு மானிடனின் ஆத்மார்த்த ஆசை‚

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .