Princiya Dixci / 2016 மார்ச் 22 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோகம் காமத்துக்கு எண்ணெயை ஊற்றுகின்றது. இது வெட்கம் அறியாதது. ஒருவரைத் தன் ஆட்சிக்குள் உட்படுத்தும் வரை உறங்குவதுமில்லை. காமத்துக்கும் மூத்தது. சுயநலமிக்கது.
காதல், காமம் இயல்பானது. ஆனால், மோகம் தகாத விடயத்துக்கும் போதையூட்டி அவர்களை முட்டாளாக்கி விடுகின்றது. தீச்சுவாலையூட்டி அமிழ்த்தி விடுவதில் சமத்து.
இது நியாயம், நீதியை உணராத அமானுஷ்ய போதை மட்டுமல்ல, சும்மா இருந்தவர்களை 'இந்த உயிர்போனால் தான் என்ன' எனும் நிலைக்குள் உட்படுத்திவிடுகின்றதே. அன்போடு இணைந்ததே காதல் மோகம் மயக்கத்துடன் கூத்துப்போட வைக்கும்.
காதலே போதை எனும் புதிய பொய்யான எண்ணத்தைத் திணிப்பது மோகம்தான். இது இரசனையூட்டாது, விரசத்தையூட்டும்.
வரும் துக்கத்தைக் கருதாது. தெளிதலையும் தெரியச்செய்யாது. தன் இஷ்டத்துக்கு உள்ளேபுகும். வெளிச்செல்லப் பிரியப்படாது.
தீராத மோகவலையில் தீய்ந்து போன பேரரசர்கள் பல் ஆயிரம். மோகம் எனும் தாகம் செய்வதெல்லாம் துரோகம். ஞானிகள் பேசும் ஞான வாசகமும் இதைத்தான்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025