Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மார்ச் 25 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவரவர் எண்ணங்கள், அவர்களுக்கே உரியது. அதன் பலாபலன்களும் அவர்களையே சார்ந்தது. ஒருவர் நினைப்புக்களில் நாங்கள் எப்படி நுழையமுடியும்.
ஆனால், எல்லாவற்றையுமே தகாத முறையில் மனதை மருட்டி வாழ்வது தமக்குத் தாமே ஏமாற்றுவது போலாகும்.
நெஞ்சத்தைப் போதை நிலையில் வைத்திருப்பது உண்மை நிலையையும் யதார்த்தத்தை புரியாமலும் வைத்துவிடும்.
மது அருந்துவதால், ஏற்படும் போதையை சில மணித்துளிகளில் அகற்றிவிடலாம், மன மயக்கமோ பொல்லா வினைகளை அள்ளித்தந்துவிடும். இயல்பாகவும், நிதானமாகவும் எம்மை நாமே ஆக்கிக்கொண்டேயாக வேண்டும்.
தகாத வார்த்தைப் பிரயோகங்கள், கூடா நட்பு, சதா கோபம், காழ்ப்புணர்வுகள், மனதைக் கண்டபடி ஓடவைத்து விழிக்காத நிலைக்குத்தள்ளிவிடும்.
தனது பணிகளைச் சீராகச் செய்பவருக்கு சலனங்கள் சல்லடைபோடமாட்டாது.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .