2021 மே 06, வியாழக்கிழமை

ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான கும்பாபிஷேகம்

Editorial   / 2017 ஜூன் 08 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான கும்பாபிஷேக தின, மணவாளக்கோல, சகஸ்ர சங்காபிஷேக நிகழ்வுகள், எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இதனையொட்டி 15ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 க்கு, விநாயகர் வழிபாடு மற்றும் வாஸ்து சாந்தி என்பன இடம்பெறவுள்ளன.

16ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு விநாயகர் பெருமானுக்கு சங்காபிஷேகம், விஷேட பூஜை மற்றும் மகேஸ்வர பூஜை என்பன இடம்பெற்று, மாலை 6.30க்கு மண்டபப் பூஜை, திரு ஊஞ்சல் என்பன இடம்பெற்று, அலங்கரிக்கப்பட்ட பூந்தண்டிகையில் விநாயகர் பெருமான் உள்வீதி மற்றும் வெளி வீதி வலம் வரவுள்ளார்.

சங்காபிஷேக நிகழ்வுகளை ஆலயத்தின் பிரதம குரு கிரியா ஞான, அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீ சாமி வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் உதவி குருக்களான திருகோணமலையை சேர்ந்த சிவஸ்ரீ எஸ். நிரஞ்சன் சர்மா, ஜீ. போஜராஜ சர்மா ஆகியோர் நடத்தவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .