Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் பெரம்பலூரில் அமைந்துள்ள பிரம்மரிஷி மலை அன்னைச் சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். காந்தி ஜெயந்தி தினமான கடந்த 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் சுவாமிகளின் தலைமையில் மாபெரும் யாகம் நடைபெற்றது.
210 சித்தர்களின் ஆசிபெற்ற அன்னைச்சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் தலைமையில் நடைபெற்ற இந்த யாக பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 108 இயற்கை மூலிகைகளைக் கொண்டு 210 சித்தர்களின் ஆசியுடன் இந்த யாக பூஜை நடந்தேறியமை சிறப்பானதாகும்.
அன்னைச்சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் அருளாசிபெற்ற ராதா மாதாஜி இந்த யாக பூஜையினை ஹட்டனின் ஒழுங்குசெய்திருந்தார். இவரோடு கோபிநாத்தும் உதவியாக இருந்தார். இங்கு நடைபெற்ற யாக பூஜைக்கும் அன்னதானத்திற்கும் அசோகன் உதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago