2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கொட்டாஞ்சேனையில் குபேர லட்சுமி யாகம்

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரம்மரிஷி மலைவாழ் அன்னைச் சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் அருளாசியுடன் கடந்த சனிக்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை ஐங்கரன் மண்டபத்தில் குபேர யாகம் நடைபெற்றது. இந்த யாகபூஜை - இலங்கை மகா சித்தர்கள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்னைச் சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் நேரடி ஆசியினைப் பெற்ற ராதா மாதாஜி தலைமையில் குபேர யாகம் இனிதே நடைபெற்றது. சுமங்கலிகளுக்கும், மாங்கல்ய பாக்கியத்தை எதிர்நோக்கியிருக்கும் இளம் பெண்களுக்கும் - பிரம்மரிஷி மலையில் தொடர்ந்து 51 நாட்கள் நடைபெற்ற கோ பூஜையில் பூஜிக்கப்பட்ட மாங்கல்யப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .