2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மாமாங்கேஸ்வரர் ஆலய சங்காபிஷேகமும் கும்பாபிஷேக மலர் வெளியீடும்

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக இறுதி தினமான நேற்று வெள்ளிக்கிழமை சங்காபிஷே நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 41 நாட்களாக ஆலயத்தில் இடம்பெற்றுவந்த மண்டலாபிஸேக பூசையினையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை 1008 சங்குகள் கொண்டு மஹா சங்காபிஷேகம் இடம்பெற்றது.

கிழக்கிலங்கையின் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயம் நீண்ட வரலாற்றினையும் பாரம்பரியத்தினையும் கொண்டதாகும்.

கடந்த 50 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து மண்டலாபிஷேகம் இடம்பெற்றுவந்தது.

சங்காபிஷேகத்தினை தொடர்ந்து கும்பாபிஷேக சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டுவைக்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X