2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய மூன்றாம் நாள் திருவிழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


வரலாற்றுச் சிறப்பு மிக்க கிழக்கிலங்கை மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் மூன்றாவது நாள் சப்புரத்திரவிழா நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த திருவிழாவில் சந்தையடி விநாயகர் ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள், மயிலாட்டம், கரகாட்டத்துடன் பட்டு எடுத்துவரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆலயத்தில் ஆறு மேளக் கச்சேரிகளுடன் திருவிழா கோலாகலமாக இடம்பெற்றதுடன் சுவாமி முத்துச்சப்புரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்திருவிழா கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  இதன் தீர்த்தோற்சவம் ஆடி அமவாசை அன்று நடைபெறும்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .