2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

விஜயப்பா சுவாமி தலைமையிலான பாதயாத்திரை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


விஜயப்பா சுவாமிகளின் தலைமையில் 50ஆவது வருடமாகவும் கதிர்காமத்திற்கான பாதயாத்திரை எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிர்தகழி  ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து இந்த பாதயாத்திரை ஆரம்பமாகவுள்ளது.

இந்த வருடத்திற்கான பாதயாத்திரைக்காக எதிர்வரும் 06.08.2013 இரவு 7 மணிக்கு திராய்மடு முருகன் ஆலயத்தில் இருந்து அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப் பிள்ளையார் ஆலயத்துக்கு வேல் கொண்டுவரப்படும்.

அடுத்த நாள் காலை மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை யாத்திரிகர்கள் பஸ் மூலம் சென்றடைவர்.

அடுத்த நாள் காலை நடைபாதை ஆரம்பிக்கப்பட்டு சங்கமண்கண்டி, கோமாரி, பொத்துவில்இ நாவலடிப்பாலம் வழியாக பாணமை, சந்நியாசி மலை, உகந்தை முருகன் ஆலயம், வண்ணாத்திவெட்டை, குமுக்கன், நாவலடி, யால போன்ற இடங்களினூடாகச் பாதயாத்திரை செல்லப்படும். மேலும் ஒருநாள் யாலவில் தங்கியிருந்து பின்பு மலைகண்ட இடம் வழியாக கட்டகாமம் சென்று வீரச்சோலை பிள்ளையார் ஆலயத்தைச் தரிசித்து கதிர்காமம் ஸ்ரீமுருகன் ஆலயத்தை பாதயாத்திரைக் குழுவினர் வந்தடைவார்கள்.

பாதயாத்திரைக்கு யாத்திரிகர்கள் செல்லும்போது அவர்களை வழி நடத்துவதற்கான குரு, கட்டுகோப்பான ஒழுங்கமைப்பு, வஸ்திரம் என்பன முக்கியம். உணவினை சுருக்கி உறக்கத்தை விடுத்து இறை சிந்தனையுடன் பஜனை, தியானம் என்பவற்றை மேற்;கொண்டு பாதயாத்திரை செல்லல் சிறப்பானதாகும்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--