2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

வாழமலை தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா

Kogilavani   / 2014 மார்ச் 28 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
லிந்துலை, வாழமலை ஹென்போல்ட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா வெள்ளிக்கிழமை(28) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

தொடர்ந்து ஐந்து தினங்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில், எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாற்குடபவனி, அம்பாளுக்கும் ஏனைய பரிபாலன மூர்த்திகளுக்கு புண்ணியாகவாஜனம், கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம், திரவிய அபிஷேகம் நடைபெற்று ஸ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு 108 சகஷ்வர நாம சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது.

மேலும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரவக்காவடி, தீமிதிப்பு, மகேஷ்வர பூஜையுடன் அன்னதானம் இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் மாலை வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ சித்திவிநாயர், ஸ்ரீ முத்துமாரி அம்மன், ஸ்ரீ முருகப்பெருமான் ஆகிய மும்மூர்த்திகளின் நகர்வலம்; இடம்பெறவுள்ளது.

31ஆம் திகதி கஞ்சி பூஜையின் பின்னர் மாவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.

இறுதிநாளான 1ஆம் திகதி நித்திய பூஜையை தொடர்ந்து ஸ்ரீ மருதவீர சுவாமியுடன் அம்பாள் கரகங்களும் வீதி உலா வந்து மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கரகம் குடி விடுதலுடன திருவிழா நிறைவு பெறவுள்ளது.

கிரியைகள் யாவும் சிவஸ்ரீ செல்வம் நிஷாந்தன் சர்மா மற்றும் பிரதேச பெரியோர்கள்  தலைமையில் பூஜைகள் நடைபெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .