2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

திருக்கோணேஸ்வரர் திருப்பூங்காவன திருவிழா

Super User   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


தட்சண கைலாயம் என போற்றப்படும் வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் திருப்பூங்காவனத் திருவிழா வெள்ளிக்கிழமை (04) இரவு திருகோணமலை மாவட்ட வங்கியாளர்களின் உபயமாக இடம் பெற்றது.

மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேஸ்வரப் பெருமான் விசேடமாக அலங்கரிக்கப்பட்ட பூங்காவில் அமர்த்தப்பட்டு பூஜைகள் இடம்பெற்றன.

இலங்கை வங்கியின் மாகாண உதவி பொது முகாமையாளர் க.ப. ஆனந்த நடேசன் சிறப்புரையாற்றினார.

திருகோணமலை ஸ்ரீ சக்தி கலாலய மாணவிகளின் மயில் நடனம், பொம்மலாட்டம், பஜனை கீதம் மற்றும் அன்புவழிபுரம் அன்பு அறநெறி பாடசாலை மாணவிகளின் சிவ நடனம் நிகழ்வுகள் இடம் பெற்றன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .