2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

பூமழைபொழிய பவனிவந்த சிந்தாயாத்திரைப்பிள்ளையார்...

Kanagaraj   / 2014 ஜூலை 04 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவஅச்சுதன்

அம்பாறை மாவட்டத்திலுள்ள வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா முதன்முறையாக உலகுவானுர்தி மூலம் பூமழைபொழிய  வியாழக்கிழமை (03) சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான  மஹோற்சவ நிகழ்வுகள்   வெள்ளிக்கிழமை (04) காலை தீர்த்த உற்சவ நிகழ்வோடு நிறைவுற்றது.


ஆலயத்தின் வரலாறு...

கி.மு.237 தொடக்கம் கி.மு.215 வரையான காலப்பகுதியில் கூர்த்திகன் என்னும் தமிழ் மன்னன் தன் சகோதரனான சேனன் என்பவனுடன் இணைந்து அநுராதபுரத்தினை ஆட்சிசெய்த 'சூரதீசன்' என்ற மன்னனை போரில் வெற்றி கொண்டு அநுராதபுரத்தை ஆட்சி செய்தான்; என்பதனை மகாவம்சத்தினூடாக அறிய முடிகின்றது.
 
கூர்த்திகன் கி.மு.3ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரத்தை அமைத்தான் எனவும் வீரர்முனை என அழைக்கப்படுகின்ற இவ்விடத்தில் காவல் அரண்களை அமைத்ததாகவும் வரலாற்றில் கூறப்படுகின்றது.

இவ்வாறு போர்வீரர்கள் காவல் அரணில் அமர்த்தப்பட்டதனால் 'வீரர்முனை' என பெயர் வழங்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை. இவ்வாறான வரலாற்று சிறப்புக்கள் வாய்க்கப்பெற்ற வீரர்முனையிலே சீர்பாததேவியும் அவளுடைய குழுவினரும் கப்பலில் வந்திறங்கினர்.

இச்சமயம் சீர்பாத தேவியினால் கொண்டுவரப்பட்ட விக்ரகம் பிரதிஸ்டை செய்யப்பட்டது. அன்று தொடக்கம் மக்களால் காலம்காலமாக வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .