2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (19.09.2010 – 25.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (19.09.2010 – 25.09.2010)
 

 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எல்லாம் தெரிந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள், பிறரின் பொருளுக்கு ஆசைப்படாத மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் பெண்களின் அன்பும் ஆதாரவும் எதிர்பாராத நம்பிக்கையை தரும். தொலை தூரங்களிருந்து செய்திகள் தேடிவரும். பணவிடயங்களுக்காக அதிக அலைச்சலை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அவசியமற்ற நட்பு அவதானத்தை ஏற்படுத்தும். கடின உழைப்பால் காய்களை நகர்த்தலாம். இனிதே உணவு இன்பமாய் அமையக் கூடும். பிரச்சினைகள் துரத்தினாலும் பின் வாங்காமல் முயற்சிக்கலாம். தெய்வீக சிந்தனை தெளிவான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்:  ஒரேஞ், சிவப்பு   
வழிபாடு: பார்வதி


 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீங்கள் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து பிறர் நலனில் அக்கறை கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் புண்ணிய காரியங்கள் செய்வதனால் வாழ்க்கைக்கு புதிய திருப்புமுனை அமையும். இனிய சொப்பனத்துடன் நல்ல உறக்கம் கிடைக்கக் கூடும். சகோதர வழியில் ஆதாயம், அதேசமயம் எடுக்கும் முடிவுகள் திருப்திகரமாக இருக்கும். கடின உழைப்பினால் கைக்கு எட்டிய பணவரவு ஏற்படலாம். திடீர் பயணங்கள் தெளிவான பாதையும் லாபத்தையும் பெற்றுத்தரும். தொழிலை விரிவுபடுத்த சில ஆலோசனைகள் லாபகரமாக அமைய வாய்ப்புண்டு. பெரியோர்களின் அன்பும் அக்கறையும் நம்பிக்கையை உருவாக்கும். துஷ்டரை கண்டு தூரவிலகி நிற்பது நல்லது. குலதெய்வ வழிபாடு குலத்திற்கு நன்மை சேர்க்கும்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்  
வழிபாடு: பெருமாள்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

மனிதநேயம் அதிகமுடைய நீங்கள் கடின உழைப்பால் எதையும் சாதித்து காட்டும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு இனிதே நண்பர்கள் இன்பமாய் அமைவார்கள். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் உறவு புது மலர்ச்சியை ஏற்படுத்தும். அரசின் ஆதாயம் புது விழிப்புணர்வை ஏற்படுத்த கூடும். கூரிய நாவு குழப்பத்தை விளைவிக்க வாய்ப்புண்டு, வார்த்தை பிரயோகிப்பதில் அவதானம் தேவை. பணபாதையில் சிலவிதமான பாதகங்கள் உருவாகலாம், ஆகவே அதில் அதிகளவு அவதானம் செலுத்தவும். காணமல்போன பொருள் கண்களுக்கு மெருகூட்ட கூடும். விசேட பிரார்த்தனைகள், பூஜைகள் வாழ்க்கைக்கு புத்துணர்வை தரும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
வழிபாடு: நவக்கிரகம்


 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

முடிவுகளை பற்றி கவலைப்படாமல் நியாயத்திற்காக போராடும் கடக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் செயல்படும் திட்டங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். தொழிலை விரிவுபடுத்தி அதிக பணவரவை அடைவீர்கள். அதேசமயம் மேலதிகாரிகளினால் எதிர்பாராத தாக்கங்கள் உருவாகலாம். மனம் தளராமல் உற்சாகத்துடன் முன்னேற்றம். குடும்பத்தில் உற்றார். உறவினர்களின் பரிவும் பாசமும் உறுதியான பிணைப்பை ஏற்படுத்தும். எதிர்பாராத செல்வ செழிப்பு ஏற்படக்கூடும். தூய்மை துன்பங்களை போக்கி ஆன்மீக நிறைவு தரும். பெண்களுடனான கருத்து மோதல்கள் கத்தி போன்று கூர்மையானது. எனவே வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடல் உபாதைகள் வந்து நீங்கும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 20ஆம் திகதி மாலை 1.20 மணியில் இருந்து செப்டெம்பர் 22ஆம் திகதி காலை  2.00 மணிவரை இருப்பதால், இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

மகம், பூரம்,  உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தப்பு செய்தவர்களை தட்டிக்கேட்கும் நீங்கள், உறவினர் காட்டிலும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் அறுசுவை உணவு நாவில் தித்திக்கும். விநோதங்கள் விபரிதத்தை ஏற்படுத்தா வண்ணம் செயற்படவும், அவதானம் தேவை. திட்டங்கள் புதிய அனுபவங்களையும் தேடி தரும். இசையில் கவனம் செலுத்துவதால் மனதிருப்தியை தரக்கூடும். மகான்களின் ஆசீர்வாதம் நீண்ட ஆயுளையும் வாழ்க்கைக்கு நல்ல திருப்புமுனையையும் ஏற்படுத்தும். எதிர்பாராத பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைப்பதோடு, பண பெருக்கத்தையும் பெற்று தரும். தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் தாமதத்தை ஏற்படுத்தலாம். எனவே பொறுமையுடன் பிரச்சினைகளை நடைமுறைப்படுத்தவும்.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி  

சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 22ஆம் திகதி காலை 2.00 மணியில் இருந்து செப்டெம்பர் 25ஆம் திகதி மாலை 1.45 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

காலத்திற்கேற்ப ஆடை - அணிகலங்களை மாற்றிக் கொள்ளும் நீங்கள், பழைய கலாசாரத்தை மறக்காத கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் பணவரவில் சில பாதகங்களை ஏற்படுத்தும், ஆகையால் பணவிடயங்களில் அதிக கண்ணோட்டத்தை செலுத்தவும். முன்னெடுக்கும் முயற்சிகள் முழுமையான பலன் தராவிட்டாலும் முழு மூச்சுடன் செயற்படவும். குடும்பத்தில் உற்றார், உறவினர்களின் வருகையினால் எதிர்பாராத நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரும். இடத்திற்கு இடம் இடமாற்றங்கள் நிகழும், அனாவசிய வாய்வார்த்தைகள் வளரவிடாமல் தடுக்கவும். தோல்விகளை கண்டு துவளாமலும் பதறாத காரியம் சிதறாத வண்ணம் செயற்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி  


 

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம், 2, 3-ஆம் பாதங்கள்.

துயரங்கள் துரத்தினாலும் வெளிக்காட்டாமல் புன்னகையுடன் உற்சாகமாக பேசும் துலா ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் சிந்தனைக்கேற்ற திட்டங்கள் தீர்க்கமான முன்னேற்ற பாதையை காட்டும். புகழ்பெற்ற நட்புக்கள் நம்பிக்கை தரக்கூடும். குடும்பத்தில் திட்டமிட்ட கருமங்கள் நிறைவேறும். நல்லுறக்கம் நலனை பாதுகாப்பதோடு புது பொலிவையும் தரும். புண்ணியகாரியங்கள் பூர்வீகத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் புது முகங்களையும் தேடித் தரும். 'பல் போனால் சொல் போனது' வார்த்தைகளை தவறவிடாதீர்கள். துயரங்கள் தூக்கி வாரிப்போட்டாலும் துணிச்சலுடன் செயல்படவும். பிறர் உதவிகள் பின் விளைவை ஏற்படுத்தா வண்ணம் பின்பற்றவும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி  

 

 

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட எளிமையை விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அதிகாரிகளின் ஆதிக்கம் அதிர்ப்தியை ஏற்படுத்தக் கூடும். பயணங்கள் புதிய பாதையை காட்டுவதுடன் சுவாரஷ்யமான அனுபவத்தை தரும். நல்லவர்களின் சேர்க்கை நல்ல நேயத்தை உருவாக்கலாம். குடும்பத்தில் உறவினர்களின் வருகை செல்வ செழிப்பை ஏற்படுத்தும். புதிய தொழில் தொடர்பாக அரச உதவிகள் கிடைக்கும். பொன்னும் பொருளும் பொலிவை ஏற்படுத்தும். நறுமணமிக்க நாவுக்கு உகந்த உணவு கிடைக்கக்கூடும். கரடு முரடான பாதைகள் முன்னேற்றத்தை தடுக்கி விழச்செய்யும், அதனால் மனம் அதிருப்தி அடையக் கூடும். மனம்தளராது முயற்சிக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு: சிவன் (சந்திரன்)

 

 

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தலைகுனிவு ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும் பொது நலனில் அக்கறை கொண்டவர்களுமான தனசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் தீய நட்புக்கள் தீராத விளைவை ஏற்படுத்தும். கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக அலைச்சலை மேற்கொள்ள வேண்டிருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். கூட்டு தொழிலை விரிவுபடுத்தி, தனபெருக்கத்தை அடையலாம். உடல் உபாதைகள் வந்து நீங்கும். தேக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தவும். புதிய திட்டங்கள் தெளிவான சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடும். விநோதங்களும் விளையாட்டுக்களும் வீண் விரயங்களை ஏற்படுத்தும். எனவே வரவுக்கு மீறிய செலவு ஏற்படாத வண்ணம் செயற்படவும். தெளிவான சிந்தனைகள் திட நம்பிக்கையை தரும்.   

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


 

 

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யாத, மனதில் பட்டதை பளிச்சென பேசும்  பழக்கமுடைய மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் எதிரிகளின் பார்வை பயத்தை ஏற்பட செய்யும். உடலுக்கு பயனற்ற உணவு நன்மை தராது, எனவே வேண்டாத உணவை தவிர்க்கவும். குடும்பத்தில் சொந்த பந்தங்களின் வருகை மனஅமைதியை ஏற்படுத்தும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது சிந்தனைகளை சிதறவிடாது செயற்படவும். எடுத்த சில காரியங்கள் தடையின்றி நிறைவேறும் இசையில் ஈடுபாட்டு மனதுக்கு இனிமை சேர்க்கக் கூடும். ஆரோக்கிய உணவு உடலுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும். மகான்களின் ஆசிர்வாதம் ஆன்மீகத்தை மேம்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மாறுபட்ட குணங்களை கொண்டவர்களிடமும் யதார்தமாக பேசி, பிறர் மனதை அடக்கி ஆளும் கும்ப ராசிக்காரர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் அனாவசிய வாய்வார்த்தைகள் அவதூறை ஏற்படுத்தும், இதனால் மனம் சங்கடம் ஏற்படக்கூடும். நாவடக்கம் அவசியம். சிக்கல்கள் சீறி பாய்ந்தாலும் பதறாத எண்ணம் சிதறாத வண்ணம் சிந்தித்து செயற்படவும். அதிகாரிகளின் மறைமுக போட்டிகளினால் வியாபாரம் வீழ்ச்சி காணக்கூடும். தோல்விகளை கண்டு துவளாமல் துணிச்சலுடன் செயற்படவும். புதிய திட்டங்கள் தோல்வியை தழுவினாலும் தோழர்கள் தோள் கொடுப்பார்கள் தெய்விக சிந்தனை தெளிவான பதையை காட்டும் அதன் வழி செல்லவும்.

அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கும் நீங்கள் பலரையும் நம்பி ஏமார்ந்து  போவீர்கள். ஒரு காலகட்டத்துக்கு பிறகு உங்களை மட்டுமே நம்பும் மீன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராத செய்திகள் வாழ்க்கைக்கு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய தொழிநுட்பங்களை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். குடும்பத்தில் உறவினர்களின் பரிவும் பாசமும் நம்பிக்கையை தரும். வெகுதூர பயணங்கள் வேகத்தையும் விவேகத்தையும் அதிகரிக்கும், அதன் மூலம் அதிர்ஷ்டம் ஆர்ப்பரிக்கும். இன்பகரமான தூக்கம் அந்நாளை நன்நாளாக மாற்றும். நன்மையான செயல்களில் ஈடுபடுவதால் புதிய அனுபவங்கள் வாழ்க்கைக்கு பக்கபலமாக இருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--