2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

‘ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணெயை குடித்த குழந்தை’பரிதாப மரணம்

J.A. George   / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருச்சி அருகே மண்ணெண்ணெயை குடித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா, காமாட்சி பட்டியில் வசித்து வரும் தம்பதி சதீஷ்குமார்- சுகன்யா. இவர்களது ஒன்றரை வயது குழந்தை ஜீவா. 

கடந்த 3ஆம் திகதி சதீஷ் வழக்கம் போல பணிக்கு திரும்பிய நிலையில், வீட்டில் சுகன்யாவுடன் குழந்தை இருந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணெயை தவறுதலாக குடித்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுகன்யா, உடனடியாக குழந்தையை தண்டலை புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

அங்கு போதிய வசதி இல்லாததால், குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

இதனையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குழந்தை ஜீவா நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

பெற்றோர்களின் அஜாக்கிரதையே இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .