Kogilavani / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு உத்தியாக சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கட்அவுட் காரணமாக வாகன விபத்துகள் மேலும் அதிகரித்துள்ளது.
இக்கட்அவுட்டில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீண்ட கால்கள் தெரிய குட்டைப்பாவாடையும் பூட்ஸும் அணிந்தவாறு காணப்படுகிறார்.
இந்த காட்போட் கட்அவுட்டானது செக் குடியரசில் பரப்பரப்பான சந்திகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதற்கான செலவை குறைப்பதே இதன் நோக்கம். வீதிகளில் பொலிஸார் நிற்பதாகக் கருதி சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துவர் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அப்பொலிஸ் உருவம் கவர்ச்சியாக இருந்ததால் ஆண் சாரதிகள் பலர் அதையே பார்த்துக்கொண்டு வாகனம் செலுத்துவதால் விபத்துகள் அதிகரித்துள்ளனவாம்.
விபத்துக்குள்ளான ஒரு சாரதியான பீற்றர் லெடரர், உள்துறை அமைச்சரிடம் செய்த புகாரில், இக்கட்டஅட்வுட்கள் இடையூறாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வளவு பனிக்காலத்தில் குட்டை பாவாடையுடன் பொலிஸார் இருப்பதென்றால் எப்படி? என அவர் கூறியுள்ளார்.
ஆனால் பொலிஸ் பேச்சாளர் இது குறித்து கூறுகையில், சிக்கன நடவடிக்கை காரணமாகவே கார்ட் போர்டிலான பொலிஸ் கட்டவுட்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025