2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பிரிட்டனின் இளம் பெற்றோர்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


12 வயது சிறுமியொருவர் சிசுவொன்றை பிரசவித்த சம்பவமொன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இந்த சிசுவின் தந்தை, 13 வயதுடையவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த பிரசவமானது, அந்நாட்டு மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த 12 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை 7 எல்.பீ அதாவது 3.175 கிலோ கிராமை கொண்டதாக இருக்கின்றதாம். இந்த குழந்தையின் பெற்றோரே பிரித்தானியாவின் இளம் பெற்றோர் என அந்நாடு அறிவித்துள்ளது.

12 வருடமும் 3 மாதமும் உடைய சிறுமியும், குறித்த சிறுமியின் வீட்டின் அயல் வீட்டில் இருக்கும் 13 வயதுடைய சிறுவனும் சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த சிறுமி 11 வயதாக இருக்கும் போதே அவர் கர்ப்பம் தரித்திருக்கின்றார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி குறித்த இளம் தம்பதியினரின் உறவினர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,

இவர்கள் வெகு காலமாக காதலித்து வருகின்றனர். தற்போது பிறந்த குழந்தையை வளர்த்தெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளனர். இந்த இளம் தம்பதியிரின் பெற்றோர்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றனர்.

ஆனால் குழந்தையை வளர்த்தெடுப்பது மிகவும் கடுமையான விடயம். காரணம் இவர்கள் மிகவும் சிறியவர்கள் என்பது மாத்திரமல்லாது இருவருமே ஒரே வயதுடையவர்கள் என உறவினர்கள் கூறியுள்ளனர்.

இவ்விளம் பெற்றோர் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாகவும் அக்;;கறையுடனும் இருக்கின்றனர். தற்போது இக்குழந்தையை வளர்ப்பதற்காக இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுத்துள்ளதுடன் திருமணம் செய்துகொள்ளவும் தீர்மானித்துள்ளனர் என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறித்த இளம் பெற்றோர் தங்களின் சந்தோஷத்தை இணையத்தளத்தினூடாக பிறந்த குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் அச்சிறுமி எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து பாடசாலை செல்ல தீர்மானித்துள்ளாராம்.

குறித்த சிறிமியின் தாய் (27 வயது) அந்நாட்டின் இளம் பாட்டி என அந்நாடு அறிவித்துள்ளதாம்.


  Comments - 0

  • jahan Thursday, 17 April 2014 08:41 AM

    ippadi paaradupavarhal irukum varikum paaliyel thuspireyoham nadanthu konde irukum... all the bast...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .