Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபை எல்லைக்குள், 4 பேர்ச் காணிகளுக்கும் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க, காத்தான்குடி நகரசபை சிபாரிசு செய்து, அனுமதி வழங்குவதென, காத்தான்குடி நகர சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் இன்று (15) நடைபெற்ற மாதார்ந்த அமர்வின் போதே, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதரனினால் காத்தான்குடி நகர சபைக்கு அனுப்பப்பட்ட 4 பேர்ச் காணிகளுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பிலான கடிதம் இதன்போது கலந்துரையாடலுக்கு எடுக்கப்பட்டு ஆராயப்பட்டது.
இதனையடுத்து, காத்தான்குடி நகர சபை எல்லைக்குள், 4 பேர்ச் காணிக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்க சிபாரிசு செய்வதென, ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
4 பேர்ச் அல்லது அதற்கு மேலுள்ள காணிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க சிபாரிசு கோரப்பட்டு, பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதத்தை ஏற்றுக் கொண்டு அதற்கான அனுமதி வழங்குவதெனவும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு, இக்கூட்டத்தில் அடுத்த 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவும் சபையால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
காத்தான்குடி நகரம் என்பது சன அடர்த்தியான ஒரு நகரமாகும். இங்கு காணிப் பிரச்சினைகள் அதிகமாக உள்ளன.
4 பேர்ச் காணியையும் அதற்குக் குறைவான அளவு பேர்ச் காணியையும் வைத்துக் கொண்டே கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி கோருகின்றனர்.
சன அடர்த்தியாக இந்த நகரத்தில் பல்வேறு நோய்களுக்கு மத்தியில் தொற்றா நோய்களுக்கும் ஆளாக வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இவைகளை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும் என, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
29 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
3 hours ago