2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மன்செஸ்டர் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

Kogilavani   / 2017 மே 24 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய இராச்சியத்தின் மன்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

"அனைத்து வகையிலுமான பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்கு, உலக நாடுகள் அனைத்தும் முன்னுரிமை வழங்க வேண்டும்" என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவுக்கு அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.

இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, "அரசியல் நோக்கங்களுக்காக,  நிராயுதபாணிகளான அப்பாவி மக்களைக் கொலை செய்தல் கோழைத்தனமான செயற்பாடாகும். துன்பகரமான சம்பவத்தை எதிர்கொண்டுள்ள பிரித்தானிய அரசாங்கத்துக்கும் அந்நாட்டு மக்களுக்கும், இலங்கை அரசாங்கமும் மக்களும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

அத்துடன், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துகொள்வதுடன், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும்" என, பிரார்த்திப்பதாகவும் அவர் அச்செய்தில் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .