2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மண்மேடு விழுந்ததில் இருவர் பலி: ஒருவர் காயம்

Kogilavani   / 2017 மே 23 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாவனெல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இச்சம்பவம் இன்றுக் காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுமார் 15 அடி உயரமான மண்மேடே, இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், ருகலகம, தேவனகல பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.ஜீ.திலக் ரூபசிங்க (வயது 46), வஹரகொல, உஸ்ஸாபிடியவைச் சேர்ந்த எம்.கே.ஜயசிறி (வயது 44) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

கட்டடமொன்றை கட்டுவதற்காக அவ்விடத்தில், இரண்டு பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி, மண்திட்டை வெட்டிக்கொண்டிருந்த போதே, இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X